தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2012

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                    த/செ/ஊ/அ/02/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
18/05/ 2012.

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2012

அன்பான தமிழ் மக்களே,

இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது.

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசுதரப்பு படிப்படியாக மீறிக்கொண்டிருந்த நிலையிலும், தமிழ்மக்கள் வேண்டிநின்ற அரசியல் தீர்வைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிறிலங்கா அரசுதரப்பு செய்யாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்த நிலையிலும், பன்னாட்டுச் சமூகம் காட்டிய மெளனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மேல் கொடிய போரைத் தொடுத்தார்கள்.

Last Updated on Thursday, 17 May 2012 16:35 Read more...

உலகப் பெண்கள் நாள் - 2012

E-mail Print PDF

உலகப் பெண்கள் நாள் - 2012

 

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/01/12

தமிழீழ விடுதலைப்  புலிகள்,தமிழீழம்.

08/03/ 2012.          

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!

இன்று உலகப் பெண்கள் நாள். உலகப்பரப்பெங்கும் பெண்களுக்கு எதிராக காலாதி காலமாக நடைபெற்றுவந்த அடக்குமுறைகளையும் அநீதிகளையும் இடித்துரைத்து பெண்களையும் சம அதிகாரத்துடன் நடத்துவதற்காக பாடுபட்ட காலத்தில் உருவானதே இந்த உலகப் பெண்கள் நாள். பல நாடுகளில் பெண்கள் ஒப்பீட்டளவில் சமவுரிமையுடன் வாழ்ந்தாலுங்கூட இன்றும் பெருமளவான இடங்களில் மிகவும் கொடுமையான வாழ்வினையே எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக இலங்கைத்தீவில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் நடுவே எமது தமிழீழப் பெண்கள் படும் கொடுமைகளும் வேதனைகளும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவுக்கு உள்ளன. எமது தமிழினம் விடுதலையை அமைதிவழியில் வேண்டிநின்ற 1950 காலப்பகுதிகளிலேயே அடக்குமுறையாளர்கள் தொடங்கிய தமிழினவழிப்பு நடவடிக்கைகள் எமது தமிழ்ப் பெண்கள் மீதுதான் ஏவப்பட்டன.

Last Updated on Thursday, 08 March 2012 05:04 Read more...

மாவீரர்நாள் அறிக்கை-2011

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                       த/செ/ஊ/அ/08/11
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
27/11/ 2011.           

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! 

இன்று மாவீரர் நாள்.

தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள்.

காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள்.

நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட  எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும். 

Read more...

புலிகளின்குரல் சிறப்பு மாவீரர்நாள் ஒலிபரப்பு 2011 - அறிவித்தல்

E-mail Print PDF

விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரல் வானொலி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

-----------------------------------

அன்பான தாயக, தமிழக, புலம்பெயர் தமிழ்பேசும் உறவுகளே,

தமிழீழ மாவீரர்நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள், நவம்பர் மாதம் 26ஆம், 27ஆம் நாட்களில் எமது  வானொலியூடாக உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு நாட்களும் தாயக நேரப்படி அதிகாலை ஐந்துமணி தொடக்கம் இரவு பத்து மணிவரை  எமது சிறப்பு ஒலிபரப்புக்கள் ஒலிக்கவுள்ளன. எமது ஒலிபரப்புக்களை எமது வலைத்தளத்திலும்  செய்கோள் ஊடாகவும் நீங்கள்  கேட்கலாம்.

Last Updated on Friday, 25 November 2011 20:26 Read more...

ஊடக அறிக்கை

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/07/11
தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.
14/11/ 2011.

ஊடக அறிக்கை

அன்பான தமிழ்பேசும் மக்களே,

புலம்பெயர் நாடுகளில் இன்று தமிழ்த்தேசியத்துக்கான போராட்டப்பரப்பிலே விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நிலவிவரும் ஐயங்களை - குறிப்பாக மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக நிலவிவரும் குழப்பநிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படுகின்றது.

தாயகத்தில் எமது அமைப்பு முழுமையான நிர்வாகத்தினை  நடாத்திக்கொண்டிருந்தபோது எமது போராட்டத்தைப் பலப்படுத்தவென புலம்பெயர் நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த கட்டமைப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட சில செயற்பாட்டாளர்களும், ஒருசில இயக்க உறுப்பினர்களும் தற்போது தன்னிச்சையாகவும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் விதத்திலும் செயற்படுகின்றனர்.

Read more...

Page 4 of 8