மறுப்பு அறிவித்தல்

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                  /செ///06/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

17/11/ 2012.          

 

மறுப்பு அறிவித்தல்

 

அண்மையில் பிரான்சில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில விஷமிகளால் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த எவருமே இக்கொலையோடு தொடர்புபடவில்லையென்பதையும் எமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லையென்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தெளிவுபடுத்துகின்றோம்.

Last Updated on Sunday, 18 November 2012 00:01 Read more...

வீரச்சாவு அறிவித்தல் - பரிதி

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/05/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
09/11/ 2012.

வீரச்சாவு அறிவித்தல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான றீகன் என்று அழைக்கப்படும் திரு.பரிதி [நடராசா மதீந்திரன்] அவர்கள் வீரச்சாவடைந்துள்ளார். கரம்பொன் ஊர்காவற்றுறையினைப் பிறப்பிடமாகக் கொண்ட பரிதி அவர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு  தொடக்ககாலப் பணியினை மன்னார் மாவட்டத்திலும் பின்னர் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவராவார்.

Last Updated on Sunday, 18 November 2012 00:02 Read more...

Respond to Erik Solheim

E-mail Print PDF

Head Quarters,                                                                                              H/S/D/A/04/12 

Liberation Tigers of Tamil Eelam,

Tamil Eelam.

28/10/2012

 

It is our responsibility as the Liberation Tigers of Tamil Eelam to respond to the unconscionable discrediting of our organisation by Mr. Erik Solheim of Norway in his recent interview with BBC after having earlier functioned, ostensibly as a neutral person, in the negotiations between the Liberation Tiger organisation and the Sri Lankan government.

In his interview Mr. Erik Solheim asserted that the Tamils faced this catastrophe due to the intransigence of the Liberation Tiger Leadership in rejecting the surrender modalities that he arranged.

Last Updated on Sunday, 18 November 2012 00:02 Read more...

எரிக் சொல்கெய்மின் கருத்துக்கான எதிர்வினை

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/04/12
தமிழீழ விடுதலைப்  புலிகள், 
தமிழீழம்.
28/10/ 2012.

முன்பு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு நடுநிலையாளராகப் பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த திரு. எரிக் சொல்கெய்ம் அவர்கள் அண்மையில் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில், எமது அமைப்பின் தலைமை மீது அபாண்டமாகப் பழிசுமத்தியது தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எமது கடமையாகும்.

அந்த நேர்காணலில், தாம் ஒழுங்கமைத்த சரணாகதி ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுதலைப் புலிகளின் தலைமை வீண்பிடிவாதம் பிடித்ததால்தான் தமிழ்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டதென்று திரு. எரிக் சொல்கெய்ம் கூறியிருக்கிறார்.

Last Updated on Sunday, 18 November 2012 00:02 Read more...

ஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு எமது அஞ்சலி

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/இ/செ/02/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

21/09/ 2012.

 

ஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு எமது அஞ்சலி

 

தமிழ்நாடு சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர் தங்கவேல் விஜயராஜ் அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில் பல்லாயிரம் வீரர்கள் தம்முயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழரின் விடுதலைக்காகப் புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் ஈகத்தின் வரிசையில் செயல் வீரன் தங்கவேல் விஜயராஜ் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

2009 மே 18 இன் தமிழின அழிப்பின் உச்சத்தில் வெற்றிக்களிப்பில் சிங்களம் இன்னமும் மிதந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை தமிழர் வரலாற்றில் உயிரும் சதையும் கலந்த மறக்க முடியாத மாபெரும் மானிட அழிவின் எச்சத்தைத் தேடியவண்ணம் மனித உரிமை அமைப்புக்கள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.

Read more...

Page 2 of 8