தலைமைச் செயலகம், த/செ/இ/செ/02/13
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
16/06/ 2013.
இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு எமது அஞ்சலி
தமிழ்நாட்டைச் சேர்ந்த இன உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி உலகத்தமிழர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எம்மினம் எதிர்கொண்டுவரும் இனஅழிப்புக்கு எதிராகவும் திரு. மணிவண்ணன் அவர்களது குரல் ஓயாது ஒலித்து வந்துள்ளது. இவர் வெறும் பேச்சாளராக மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் பல்வேறு தளங்களில் ஈழ விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் உண்மையான இன உணர்வோடு உழைத்த களச்செயற்பாட்டாளர்.







